தெஹியத்தகண்டி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள தெகிவித்தாகம, வெவ்கம, வெவ்மெதகம, இணாலிகல தெற்கு, இணாலிகல வடக்கு, பரணகம, சமனலதன்ன, சூரியபுக்குன ஆகிய பிரதேசங்களில் ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் திரு. சஜீத் பிரேமதாசா அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று 22.08.2024 ஆம் திகதி நடைபெற்றது.
வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் இக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்பு செயலாளர் திரு. மஹிலால் சில்வா, அம்பாறை நகர சபை முன்னாள் உருப்பினர் தெரன், பதவிசிரிபுர பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நிமால் திஸ்ச, தெஹியத்தகண்டி பிரதேச கூட்டுறவு சமாஜத்தின் தலைவர் திரு. ஜெயதிலக்க, ரனவீர மற்றும் கட்சி கிளைகளின் அமைப்பாளர்கள், செயலாளர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
( றிஸான் றாசீக் )
No comments:
Post a Comment