கல்முனை ஸாஹிரா கல்லூரியின் சாரணர் மாணவர்களுக்கு சின்னம் சூட்டுதல் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய சாரணர் அங்குரார்ப் பண விழா ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 21 August 2024

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் சாரணர் மாணவர்களுக்கு சின்னம் சூட்டுதல் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய சாரணர் அங்குரார்ப் பண விழா !



கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை சாரணர் குழுவின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய சாரணர்களின் அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் ஏனைய சாரணர்களுக்கான சின்னம் சூட்டு விழா (2024.08.21) இன்று கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் பாடசாலை அதிபர் ஜனாப் MI. ஜாபீர் (SLEAS) தலைமையிலும் மேஜர். கே. எம். தமீம் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது.



இந்நிகழ்வில்  அக்கரைப்பற்று கல்முனை சாரணர்  மாவட்ட ஆணையாளர் எம். ஐ. உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டாதோடு கௌரவ அதிதிகளாக டாக்டர். எஸ். எல். றியாஸ் ( தலைவர்- அக்-கல் சாரணர் சங்கம்), எம். எல். எம். முதர்ரிஸ் (Asst. Director of Education ZDE Kalmunai), MH.ஜெய்னுடீன் (Badge Secretary ), ILM.இப்ராஹீம்(ADC-Zone), S.தஸ்தகீர்(ALT), MIA.ஸலாம்(ALT) ,HM.ஜெமீன்(Master in Charge), MBM.ஹஸ்மின்(GSM - An-Nusar Open scout group,WB), எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம் (Scout Leader), AM.அன்ஸார்(Resource Person- ZDE office Kalmunai, SMM.றம்ஸான் (Scout Leader) முன்னால் ஜனாதிபதி சாரணர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதன் போது பிரதமர் விருதுக்கான பாடத்திட்டதிலுள்ள காட்டுவாசியின் தோள்வார் கட்டிழை சாரணர்களுக்கு அணிவிக்கப்பட்டதோடு மேலும் திறமைகாண் சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அங்கத்துவ சின்னம் பூர்த்தி செய்த சாரணர்களுக்கான அங்கத்துவ சின்னமும் சூட்டப்பட்டது.



மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய சாரணர்களுக்கு சாரணர் கழுத்தணி அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.










                                          ( முஹம்மத் இஃஜாஸ் )

No comments:

Post a Comment

Post Top Ad