போரதீவுப்பற்றில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டுயானைகள் விரட்டியடிப்பு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 22 August 2024

போரதீவுப்பற்றில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டுயானைகள் விரட்டியடிப்பு!



மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, மண்டூர், வட்டாவளை ,கறுத்தபாலம் , வேத்துச்சேனை ,போன்ற பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை நீண்டகாலமாக அதிகரிக்கப்பட்டுவந்தது.


பொதுமக்களின் குடிமனைகளை நோக்கி அங்குள்ள வாழ்வாதாரங்களையும் பயிர்களையும் சேதப்படுத்தி வந்தது.



இது தொடர்பாக பொதுமக்கள் இணைந்து பிரதேச செயலாளர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக வெல்லாவெளி வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கி.சே.உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் பொதுமக்கள் என ஏராளமானோரின் உதவிகளோடு இன்று (22-08-2024) ஆம் திகதி பிற்பகல் சுமார் (14 ) பதிநான்கு காட்டு யானைகளை விரட்டியடிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad