அல்-அஷ்ஹர் வித்தியாலயத்தின் சுற்றாடல் கழகத்தின் ஏற்பாட்டில், சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.அப்துல் ஜப்பார் தலைமையில் நேற்று (30) பாடசாலையின் வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதீதியாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மட் ஹனிபா அவர்களும் அதீதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் சுற்றாடல் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.
மேலும் நிகழ்வில் அல்-அஷ்ஹர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர்களான ஏ.எம். பஸ்மியா, எம்.எல்.எம்.ஹுசைன் ஆகியோரும் பாடசாலை சுற்றாடல் கழக தலைவரும் ஆசிரியருமான பி.எம்.சியாட் அவர்களும் மேலும் சுற்றாடல் கழக ஆசிரியர்களான பி.எம்.நிஹாப்தீன், எஸ்.ஏ.எம்.பௌஸ்தீன், ஏ.ஆர்.நஜுமுதீன், ஏ.பஷீர், எம்.ஐ.கே.இபாமா, எச்.எஸ்.ஜுமானா பர்வின் அவர்களும் பாடசாலையின் ஆசியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
(அகமட் கபீர் ஹஷான் அஹமட்)
No comments:
Post a Comment