மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளம் ஜோடி ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 10 July 2024

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளம் ஜோடி !



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள இளைஞன் ஒருவரும் சிறுமி ஒருவரும் தவறான முடிவெடுத்து ஒரே இடத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.


மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே நேற்று (09) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


வெல்லாவெளி, திக்கோடை தும்பாலை கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய கெங்கநாதன்- ரதன் மற்றும் 16 வயதுடைய புண்ணியமூர்த்தி - பேஜினி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


37ஆம் கிராமம்  4ஆம் வட்டார வீதியில் உள்ள வேம்பு மரத்தில் தூங்கிய நிலையில் பொதுமக்களினால் குறித்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


காதல் விவகாரம் காரணமாக குறித்த இருவரும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாம் எனவும் இது தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment

Post Top Ad