இலங்கையின் இணைந்த தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் - கல்முனையில் பாடசாலை கள் ஸ்தம்பிதம்,தபால் சேவையும் முடக்கம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 10 July 2024

இலங்கையின் இணைந்த தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் - கல்முனையில் பாடசாலை கள் ஸ்தம்பிதம்,தபால் சேவையும் முடக்கம் !



இலங்கையின் பல்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் இன்று (09) செவ்வாய்கிழமை முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. 



கல்முனை பிரதேச பாடசாலைகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் வரவின்மையால் பாடசாலைகள் நடைபெறவில்லை. இதே வேளை கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகம் மூடப்பட்ட நிலையில் தபால் சேவையும் ஸ்தம்பிதமடைந்திருந்தது. 
அதிபர் ஆசிரியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த  சம்பள முரண்பாட்டுத் தீர்வினை வழங்கும்படி  வலியுறுத்திஅதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், ஏனைய துறை சார்ந்த தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் இறங்கி யுள்ளதை அவதானிக்க முடிந்தது.


இவ்வேலை நிறுத்தத்தின் காரணமாக கல்முனை பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையை அவதானிக்க முடிந்தது.



No comments:

Post a Comment

Post Top Ad