ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பாரம்பரிய உணவின் பயன்கள் தொடர்பான செயற்பாடுகள் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சின் அனுசரணையில் பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் வழிகாட்டலில் பிரதேச செயலக பிரிவு தோறும் இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் தலைமையில் பாரம்பரிய உணவு மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பான நிகழ்வு அலுவலக உத்தியோகத்தர்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (16) அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வந்தாறுமூலை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வைத்தியர் திருமதி கீர்த்தனா குமரன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சின் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.நஜீம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
( எஸ்.எம்.எம்.முர்ஷித் )
No comments:
Post a Comment