தனது மகன் நூறு ரூபாய் பணத்தை திருடினான் என்ற குற்றத்திற்காக தகப்பனால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவை சேரந்த தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன் தனது தந்தையின் சேட் பக்கட்டில் இருந்து நூறு ரூபாயை திருடி செலவளித்தார் என்ற குற்றத்திற்காகவே தகப்பனால் கடந்த திங்கள் கிழமை இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் பற்றி அறியவருவதாவது, தனது சேட் பக்கட்டில் வைக்கப்பட்ட பணத்தில் நூறு ரூபா குறைந்துள்ளதை அறிந்த தகப்பன் தனது மகனிடம் எனது சேட் பக்கட்டில் இருந்து பணம் எடுத்ததா என்று கேட்கவும் மகன் ஆம் நான் எடுத்து செலவளித்து விட்டேன் என்று கூறியதற்கிணங்க தகப்பன் மகனுக்கு சூடு வைத்துள்ளார்.
அடுத்தநாள் பாடசாலைக்கு செல்ல முடியாது என்றும் தனக்கு கை வலியாகவுள்ளதாகவும் மகன் கூறிய நிலையில் பாடசாலைக்கு செல்லாவிட்டால் மீண்டும் சூடு வைப்பேன் என்று அச்சுறுத்தியதில் சிறுவன் பாடசாலை சென்றுள்ளான்.
நேற்று செவ்வாய்க்கழமை பாடசாலையில் மாணவன் சோகமாக இருந்த நிலையில் வகுப்பாசிரியர் மாணவனை விசாரித்த போது மாணவன் நடந்த விடயத்தை தெரிவித்துள்ளான்.
மாணவனின் நிலையை அறிந்த பாடசாலை நிருவாகம் வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அழைத்துச் சென்று முறையிட்டதன் பின்னர் வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து மாணவனின் தந்தை கைது செயயப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுததப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment