கல்வி அமைச்சும் இலங்கை கணக்கீட்டு தொழிநுட்பவியலாளர் கழகமும் (AAT நிறுவனம்) ஏற்பாடு செய்து நடாத்திய தேசிய, மாகாண பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த கணக்கறிக்கை மற்றும் சிறந்த வருடாந்த அறிக்கை போட்டி - 2023 ல் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதற்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த 04/07/2024 அன்று கொழும்பு BMICH Lotus மண்டபத்தில் நடை பெற்றது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவினால் பாடசாலைக்கான விருதும், சான்றிதழும் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக்கிடம் வழங்கி வைக்கப்பட்டது.
வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
மட்டக்களப்பு மத்தி வலயத்திலிருந்து இப் போட்டியில் பங்கு பற்றி விருது பெற்ற ஒரே பாடசாலை ஓட்டமாவடி மத்திய கல்லூரி ஆகும்.
அத்துடன் தொடர்ச்சியாக 05வது தடவையாகவும் இவ்விருதினை வென்றுள்ளதுடன் 2019ல் மாவட்டத்தில் முதலிடம் பெற்றமையும் குறிப்பிடத் தக்கது.
( எஸ்.எம்.எம்.முர்ஷித் )
No comments:
Post a Comment