அகில இலங்கை YMMA பேரவையின் 74வது வருடாந்த தேசிய மாநாடு தேசிய தலைவர் அல்ஹாஜ் இஹ்ஸான் ஏ ஹமீத் தலைமையில் நேற்று (29) சனிக்கிழமை பகல் 2.00 மணி முதல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான துருக்கி நாட்டின் உயர்ஸ்தானிகர் கெளரவ Semin luthfuThurgut மற்றும் கெளரவ அதிதியாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் லெப்டினன் Justice LTB Dehideniya ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
இந்நிகழ்வில் அகில இலங்கை YMMA பேரவையின் முன்னால் தலைவர்கள், மாவட்ட பணிப்பாளர்கள் அங்கத்துவ YMMA களின் 175 கிளைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன், அகில இலங்கை YMMA பேரவையின் 75ஆண்டு நிறைவு மலரும் வெளியிடப்பட்டது.
இதில் 2023/2024ஆம் ஆண்டிற்கான சிறந்த செயற்திட்டங்களை முன்னெடுத்த YMMA கிளைகளுக்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அதனடிப்படையில் பின்வரும் இரண்டு விருதுகள் அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி கிளைக்கு கிடைக்கப்பெற்றன. இவ்விருதுகளை கிளையின் தலைவரும் மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளருமான எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம் பெற்றுக்கொண்டார்.
- சிறந்த சுகாதார செயற்திட்டத்திற்கான விருது - A. Fahmee Oowise Challange Trophy.
- சிறந்த அங்கத்துவ YMMA யின் தலைவர் - M. Lafir Cassim Challenge Trophy.
மேற்படி விருதுகளை பெறுவதற்காக ஒத்துழைப்பு நல்கிய மாவட்ட பணிப்பாளர் எம். ஐ. எம். றியாஸ், கிளையின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மணமார்ந்த நன்றிகளை கிளையின் தலைவர் தெரிவித்துக் கொள்கின்றார்.
No comments:
Post a Comment