அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக 30 சமூக ஊடக ஆர்வலர்களைக் கொண்டு ஒரு வருட கால திட்டமாக கப்சோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் "Youth Media Project" வேலைத்திட்டமானது கப்சோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
இன் நிகழ்ச்சிட்டத்தின் ஐந்தாவது கட்ட நிகழ்வு கல்முனையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று(30) நடை பெற்றது.
இன் நிகழ்வுகளுக்கு வளவாளராக 29ம் ,30ம் திகதிகளில் சட்டத்தரணியும் ஊடக பயிற்றுவிப்பாளருமான பெனிஸ்லஸ் துஷான் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர்களுக்கு "கலை மற்றும் ஊடகங்கள் மூலம் படைப்பு வெளிப்பாடு" சம்மந்தமான விரிவுரையினை வழங்கி இருந்தார்.
GCERF ,HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்படும் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் கீழ் Youth Media Project ஆனது நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(அகமட் கபீர் ஹஷான் அஹமட்)
No comments:
Post a Comment