கிழக்கிலங்கையில் மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் தெற்குத் திசையிலே பழம் பெரும் பதியாம் தொன்மை மிக்க அழகிய கிராமமாம் திருப்பழுகாமத்தில் சைவப் பெருமக்களால் நீண்ட காலமாகப் போற்றிப் பாதுகாத்து வரும் ஸ்ரீ வேம்படி நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது நிகழும் குரோதி வருடம் ஆனித்திங்கள் 24ம் நாள் (08-07-2024) ஆம் திகதி திங்கட்கிழமை திருதியை திதியும் ஆயிலிய நட்சத்திரமும் அமிர்த சித்த யோகமும் கூடிய சுப வேளையில் ஆரம்பமாகி, ஆனித்திங்கள் 28ம் நாள் (12-07-2024)ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 2.00 மணிக்கு விநாயகப் பொங்கல் பானை வைக்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து தேசத்துப் பொங்கல் வையவமும் நடைபெறும்.
இரவு 7.00 0 மணியளவில் விசேட பூசையுடன் இனிதே நிறைவு பெறும், உற்சவ காலத்தில் அனைவரும் வருகை தந்து கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகிய ஸ்ரீ வேம்படி நாகதம்பிராணின் அருளைப் பெற்றுய்யுமாறு இறையன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment