அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்கள் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள நிலையில் இன்று(12) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சாதாரண தர பரீட்சை வினாத்தாள் மதிப்பிட்டுப் பணி நடவடிக்கைகள் நிறுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறு பல சந்தர்ப்பங்களில் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தாலும் இதுவரையில் அதற்கான உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லையென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்று(12) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சாதாரண தர பரீட்சை வினாத்தாள் மதிப்பிட்டுப் பணி நடவடிக்கைகள் நிறுத்தப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment