சம்மாந்துறையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கிளை புணரமைப்புக்கூட்டம்! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 June 2024

சம்மாந்துறையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கிளை புணரமைப்புக்கூட்டம்!



சம்மாந்துறை மட்டக்களப்பு தரவை 01  கிராம சேவகர் பிரிவுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கிளை புணரமைப்புக்கூட்டம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் நேற்று (11) நடைபெற்றது. 



இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், அரசியல் அதி உயர் பீட உறுப்பினரும்,  முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான சட்டத்தரணி எம்.எம். சௌபீர், சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் அர்ஷத் இஸ்மாயில் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.







                         (அகமட் கபீர் ஹஷான் அஹமட்) 

No comments:

Post a Comment

Post Top Ad