அக்கரைப்பற்று வலய மட்ட தமிழ் தினப் போட்டி ஒலுவில் அல் - மதீனா வித்தியாலய மாணவர்கள் 09 பேர் வெற்றிப் பதக்கங்கள் பெற்று சாதனை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 30 June 2024

அக்கரைப்பற்று வலய மட்ட தமிழ் தினப் போட்டி ஒலுவில் அல் - மதீனா வித்தியாலய மாணவர்கள் 09 பேர் வெற்றிப் பதக்கங்கள் பெற்று சாதனை !



அக்கரைப்பற்று வலய மட்ட தமிழ் தினப் போட்டியில் ஒலுவில் அல் - மதீனா வித்தியாலயத்தில் இருந்து இசை, நடனம், கும்மி கோலாட்டம், நிகழ்சியில் பங்கு பற்றிய 09 மாணவர்கள் வலய மட்டத்தில் வெற்றிப் பதக்கங்களைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.


இன்று 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று அல் - முனவ்வறா கனிஷ்ட வித்தியாலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. 


இதில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் ஆகிய கல்விக் கோட்டங்களிலுள்ள பாடசாலைகள் பங்கு பற்றின.

இதில் ஒலுவில் அல் - மதீனா வித்தியாலயத்தில் இருந்து இசை நடனம், கும்மி கோலாட்டம் நிகழ்சியில் பங்கு பற்றிய 
  1. ஏ.ஆகிபா ஷஹ்லா,
  2. எம்.எஸ்.ஆயிஷா, 
  3. எம்.எஸ்.ஷாரா அதீமா,
  4. ரி.றுஸ்னத் நப்லா,
  5. ஜே.அதிகா,
  6. ஏ.எம்.ரின்சா,
  7. ஏ. Bபி.சைனப் மிஸ்பா, 
  8. எம்.ரி.அக்ஸா,
  9. எப்.ஹப்ஸா மர்யம் 
ஆகிய மாணவர்களே வலய மட்டத்தில் வெற்றிப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சியை  ஆசிரியை     
ஜே. நூர் சுஹாறா வழங்கினார். இவ்வாசிரியை மற்றும் மாணவர்களை பாடசாலை சமூகம் பாராட்டுகின்றது.

No comments:

Post a Comment

Post Top Ad