மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் கிராம பாடசாலைகளை விளையாட்டுத் துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்திற்கு சில விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (14/06/2024) இடம் பெற்றபோது ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வினால் பாடசாலை அதிபர் எம்எஸ்.எம்.றிஸ்மினிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மெளலான, பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், பிரதி திட்டப் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், பாராளுமன்ற உறுப்பினரின் ஒட்டமாவடி இணைப்பாளர் ஏ.ஜி.றபீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சி திட்டத்தில் பாடசாலையை உள் வாங்குவதற்கு உதவியாக இருந்த பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், பிரதி திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், ரிதிதென்ன கிராம உத்தியோகத்தர் றிகாஸ் இஸ்மாயில் ஆகியோருக்கு பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தெரிவித்தார்.
( எஸ்.எம்.எம்.முர்ஷித் )
No comments:
Post a Comment