இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் முன்பாக பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர் படுகாயம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 June 2024

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் முன்பாக பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர் படுகாயம் !



அம்பாரை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழகம் முன்பாக பிரதான வீதியில் நேற்று இரவு 07.45 மணியளவில் கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்துக்குள்ளானது.


இச் சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.



மோட்டார் வாகனத்தில் வந்த நபர் குடிபோதையிலிருந்துருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                                        (எஸ்.அஷ்ரப்கான்)

No comments:

Post a Comment

Post Top Ad