கதிர்காம பாதயாத்திரையை எதிர்வரும் (30-06-2024)ஆம் திகதி மேற்கொள்வதற்கு எவ்வித தடையும் வராது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் இன்று (18-06-2024) இட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "90 நபர்பளைக் கொண்ட யாத்திரிகர் குழுவினை சந்தித்த போது அவர்கள் முன்வைத்த கோரிக்கை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
இதற்கமைய, எதிர்வரும் 30ஆம் திகதியே காட்டுப்பாதையைத் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுத்தியளித்ததை யாத்திரிகர்களுக்கு தெரியப்படுத்தினேன்.
மேலும், இதற்காக எதிர்வரும் (20-06-2024)ஆம் திகதி மாலை 3 மணிக்கு அம்பாறை கச்சேரியில் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதையும் யாத்திரிகர்களிடத்தில் தெரிவித்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவை பார்வையிட
No comments:
Post a Comment