காத்தான்குடி சுதந்திர ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் ஊடக செயலமர்வு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 4 May 2024

காத்தான்குடி சுதந்திர ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் ஊடக செயலமர்வு !



காத்தான்குடி சுதந்திர ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் "பகிர்வதற்கு முன் சிந்தியுங்கள்" எனும் தொனிப்பொருளில்  ஊடக செயலமர்வு  ஒன்று இன்று செய்குல் பலாஹ் கல்வி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் போரத்தின் தலைவர் எம்.எச்.எம்.அன்வர் தலைமையில் இடம்பெற்றது.


இவ்ஊடக செயலமர்வின் வளவாளராக சிரேஸ்ட ஊடகவியலாளரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பீ.எம்.பைறூஸ் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.



தற்காலத்தில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கின்ற போலி செய்திகளை எவ்வாறு இனங்காண்பது, தற்காலத்தில்  சமூகவலைத்தள பாவனையின் போது எவ்வாறான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என பல்வேறு விடயங்கள் கலந்து கொண்டோருக்கு வளவாளரால் தெளிவூட்டப்பட்டது.


இவ் ஊடக செயலமர்வில் மூத்த ஊடகவியலாளர்கள், இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் இறுதியில் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன.












                                                         ( உமர் அறபாத் )

No comments:

Post a Comment

Post Top Ad