சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் இரண்டு கிளைக் காரியாலங்கள் செவ்வாய்க்கிழமை அன்று ஏறாவூரில் திறந்து வைக்கப்பட்டன.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட முதுமானி கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கிம் அவர்களும் கௌரவ அதிதிகளாக மட்டக்ககளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவருமான செய்யித் அலிஸாஹிர் மெளலானா அவர்களும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர்,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் MLAM.ஹிஸ்புல்லாஹ் அவர்களும்,ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் MSM. நழீம் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
கட்சியின் முதலாவது பிரதேச கிளைக் காரியாலயம் ஏறாவூர் மத்தியக்குழு உறுப்பினரும் இக்ரா விளையாட்டுக்கழகத்தின் தலைவருமான MKM.மனாப் தலைமையில் மீராகேணி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வின் போது மரநடுகையும் இடம்பெற்றதோடு கலந்து கொண்ட அதிதிகளை கௌரவிக்கும் நோக்கில் பொன்னாடை போற்றி நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
ஏறாவூர் இரண்டாவது கிளைக்காரியாலயம் அதிதிகளின் பங்கேற்புடன் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளரும் உயர்பீட உறுப்பினருமான MSM.நழீம் அவர்களின் தலைமையில் ஏறாவூர் ஓட்டுப்பள்ளி வட்டாரத்தில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
( உமர் அறபாத் )
No comments:
Post a Comment