மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சவால் கிண்ணம் கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2024 ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 May 2024

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சவால் கிண்ணம் கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2024 !


மட்டக்களப்பு மாவட்ட செயலக நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள அரசாங்க அதிபர் சவால் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (30) பி.ப.3.30 மணிக்கு மட்டக்களப்பு வெபர் மைதாணத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில்  நடைபெற்றது.




நிகழ்வின் பிரதம அதிதியாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன் கலந்துகொண்டார்.



அரசாங்க அதிபர் சவால் கிண்ணம் 2024 இற்காக மட்டகளப்பு மாவட்டத்தில் செயற்படும் சகல அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், வைத்தியசாலைகள், கிழக்குப் பல்கலைக்கழகம் உட்பட சகல நிறுவனங்களிலும் இருந்தும் ஆண்கள் சார்பாக 60 அணிகளும், பெண்கள் சார்பில் 16 அணிகளுமாக 76 அணிகள் பங்கேற்கின்றன.



மாவட்டத்தின் நலன்களுக்கான செயற்படும் சகல அரச நிறுவனங்களுக்கும் இடையே நட்புறவையும், உத்தியோகத்தர்கள் உளநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் போட்டிகள் ஏற்பபாடு செய்யப்பட்டுள்ளன.



ஆரம்ப நிகழ்வில், கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் உ.சிவராஜா, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், காணிப் பகுதிக்கான மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரநவரூபரஞ்சனி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மாவட்ட செயலக அதிகாரிகளான கணக்காளர் எம்.வினோத், கே.மதிவண்ணன் உட்பட அரச அதிகாரிகள், விளையாட்டுத்துறை அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.

வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.


நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளருக்கு மாவட்ட விளையாட்டுத்துறை மேம்பாடுகள் தொடர்பில், அரசாங்க அதிபரால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













                                         ( சுந்தரலிங்கம் ரஞ்சன் )

No comments:

Post a Comment

Post Top Ad