அட்டாளைச்சேனையை சேர்ந்த எஸ்.எல்.தாஜுதீன் சுமார் 25 வருட கால தனது விளையாட்டு உத்தியோகத்தர் பதவியில் இருந்து நேற்று (28) ஓய்வு பெற்றுள்ளார்.
1964 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வியினை அக்கரைப்பற்று வலய அல்-முனீரா வித்தியாலயத்திலும், தனது உயர்கல்வியினை அட்டாளச்சேனை மத்திய கல்லூரியிலும் (தேசிய பாடசாலை) கற்றார்.
வட்சப் சேனல் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்
1990-1999 காலப்பகுதியில் கூட்டுறவு கிராமிய வங்கி முகாமையாளராகவும் பின்னர் 1999 - 2000 காலப்பகுதியில் அமைய விளையாட்டு உத்தியோகத்தராகவும் கடமையாற்றிய இவர், பின்னர் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை விளையாட்டு உத்தியோகத்தராக நிரந்தரமாக கடமையாற்றி பிரதேசத்தின் பல்வேறு மட்டங்களிலும் விளையாட்டு துறையை ஊக்குவிப்பதில், முன்னேற்றுவதில் பல்வேறு பங்களிப்பை ஆற்றினார்.
இவர் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அட்டாளச்சேனை பிரதேசத்தில் கிழக்கு மாகாண விளையாட்டு விழாவை கொண்டு வந்து மிக பிரம்மாண்டமான பல சாதனைகளை மாணவர்கள், இளைஞர்கள் நிலை நாட்டுவதற்கு காரணமாக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றினார்.
இவரது விளையாட்டு பாசறையில் வளர்ந்த மாணவர்கள் மாவட்டம், மாகாணம் மற்றும் தேசிய மட்டம் வரை பல்வேறு சாதனைகளை படைத்தார்கள்.
வட்சப் குழுமம் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
தற்போது இவரின் மாணவர்கள் விளையாட்டுத் துறையில் அம்பாறை மாவட்டத்தில் பிரகாசித்துக் கொண்டு பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இதனால், எஸ்.எல். தாஜூதீனின் ஓய்வு விளையாட்டுத்துறையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment