குரோதி" வருட சித்திரைப் புத்தாண்டை முன்னீட்டு மட்டக்களப்பு மாவட்டம் பெரியபோரதீவு "கோல்ட் சிற்றி" விளையாட்டுக் கழகம் 32 வது ஆண்டை முன்னிட்டு பெருமையுடன் நடாத்தும் கலாசார விளையாட்டு விழாவானது இன்று (28) பி.ப-2.30மணிக்கு பெரியபோரதீவு பொதுவிளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் சி.உதயகுமார் தலைமையில் இடம் பெற்றன.
வட்சப் சேனல் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
பிரதம அதிதியாக, திரு.சோ.ரங்கநாதன், பிரதேச செயலாளர் போரதீவுப்பற்று,வெல்லாவெளி
ஆன்மீக அதிதியாக, செ.சற்குணராசா ஐயா அவர்கள் (நித்திய குரு சிறி பத்திரகாளியம்மன் ஆலயம்,பெரியபோரதீவு)
கௌரவ அதிதியாக, S.பகீரதன் (போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர்), Dr.m.முத்து முருகமூர்த்தி (வைத்திய நிபுணர், போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு) , Dr.m.ராகுலன் (வைத்தியர், கல்முனை ஆதார வைத்தியசாலை) அவர்களும் அதிதிகளாகவும் அழைக்கப்பட்டு, மாலை அணிவித்து அழைத்துவரப்பட்டனர்
அதனைத்தொடர்ந்து கொடியேந்தல் வைபவம், மங்கல விளக்கேந்தல், இறைவணக்கம், வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகளுரை என்பன இடம்பெற்றன.
சித்திரை கலாசார விளையாட்டுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இடம்பெற்றனர்.
வட்சப் குழுமத்தில் இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
பாடசாலை மாணவர்களை கௌரவித்தல் மற்றும் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனை களுக்கான பரீசில்கள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகம்.
இன்றைய நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் கிராமஉத்தியோகஸ்தர்கள் விளையாட்டுகழக உறுபினர்கள் சிறுவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(S.ரஞ்சன்)
No comments:
Post a Comment