காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மாபெரும் இரத்ததான முகாம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 28 April 2024

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மாபெரும் இரத்ததான முகாம் !



காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை காத்தான்குடி கிளையின்  சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில்  இரத்ததான முகாம்  இன்று (28)  இடம்பெற்றது. 

வட்சப் சேனல் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.

இதில் நூற்றுக்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானம்   செய்தனர். 


இதன் ஆரம்ப வைபவம்  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்  அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை தலைவர் மெளலவி ஹாரூன் ரசாதி தலைமையில்  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியாட்சகர் டாக்டர் எம். எஸ். எம். ஜாபீர் அவர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது. 



காத்தான்குடி தளவைத்தியசாலை  குருதிக் கொடையாளர்கள் சம்மேளனம் (BDF) மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின்  சமூக சேவை பிரிவின் செயலாளர் மௌலவி அனீஸ் பலாஹி ஆகியோரின் ஒருங்கமைப்புடன் நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்வில் சுமார் 97 மைன்ட் உதிரம் சேகரிக்கப்பட்டது. 

வட்சப் குழுமம் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.



இந்நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்திய அதிகாரி டாக்டர் அலிமா அப்துர் ரஹ்மான் உட்பட வைத்திய சாலை நிர்வாக அதிகாரிகள், உலமாக்கள், குருதிக் கொடையாளர்கள் சம்மேளனே பிரதிநிதிகள், வைத்தியசாலையின் தாதியர்கள், ஊழியர்கள், குருதிக் கொடையாளர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.


                                                           (உமர் அரபாத்  )


No comments:

Post a Comment

Post Top Ad