சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் வைத்தியசாலையில் மரணம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 1 April 2024

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் வைத்தியசாலையில் மரணம் !

 


வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை மரணமடைந்துள்ளார்.


குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.

வைத்தியசாலையில் குறித்த கைதிக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மாரடைப்பு காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.  


ஜாஎல பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.  குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad