அல்-ஹிலால் வித்தியாலயம் காஸா சிறுவர்களுக்கு நிதி உதவி ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 1 April 2024

அல்-ஹிலால் வித்தியாலயம் காஸா சிறுவர்களுக்கு நிதி உதவி !



காஸா சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிதியத்திற்கு சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயம் இரண்டு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா நிதி அன்பளிப்புச் செய்துள்ளது.


வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும். 


இந்தப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடையே இருந்து திரட்டப்பட்ட மேற்படி நிதியை பாடசாலை அதிபர் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (01) கல்முனையில் அமைந்துள்ள வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்றது.



பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களிடம் குறித்த தொகைக்கான காசோலையை, பணிமனையின் கணக்காளர் வை.ஹபீபுள்ளாஹ் முன்னிலையில் கையளித்தார். 


இந்நிகழ்வில், பாடசாலையின் பிரதி அதிபர் நுஸ்ரத் பேகம் உதவி அதிபர்களான ஜஹ்பர், றொஸான் டிப்றாஸ், யூ.எல். லாபிர், ஏ.எல்.எம். உவைஸ் அத்துடன் ஆசிரியர் ஜாஸிர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் இல்யாஸ் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பித்தக்கது.


                                           ( நூருல் ஹுதா உமர் )

No comments:

Post a Comment

Post Top Ad