கே.பீ.எல்.கிரிக்கெட் போட்டியில் சம்பியன் கிண்ணம் வென்றது கைகாட்டி நைட் ரைடர்ஸ் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 12 April 2024

கே.பீ.எல்.கிரிக்கெட் போட்டியில் சம்பியன் கிண்ணம் வென்றது கைகாட்டி நைட் ரைடர்ஸ் !



அஷ்ஹரியன்ஸ் இளைஞர் நண்பர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “கைகாட்டி பிரிமியர் லீக்” எனும் நாமத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒரு நாள் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று (11) சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 


இப்போட்டியில் 6 அணிகள் கைகாட்டியினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்த போதும் இறுதிப்போட்டிக்கு கைகாட்டி ரோயல்ஸ் மற்றும் கைகாட்டி நைட் ரைடர்ஸ் அணிகள் தெரிவாகி இருந்தது. இதில் கைகாட்டி நைட் ரைடர்ஸ் அணி வெற்றியினை தனதாக்கி கொண்டதுடன் கைகாட்டி ரோயல்ஸ் அணி 2 ஆம் இடத்தினை பெற்றது.



இந்நிகழ்வில் அதீதிகளாக ஐ.கே.கோல்ட் ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சியான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நளீம் மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்யாலய ஆசிரியரும் சட்டக் கல்லூரி மாணவனுமான ஹாதிக் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

வட்சப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

அஷ்ஹரியன்ஸ் இளைஞர் நண்பர்கள் அமைப்பின் 4 வருட பூர்த்தியினை முன்னிட்டும் நோன்புப் பெருநாளை சிறப்பிக்கும் வகையிலும் கலை,கலாசாரத்தை தாண்டி விளையாட்டிலும் அமைப்பின் செயற்பாடுகளும் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையிலே இந்த போட்டி நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.  



இந்நிகழ்வுக்கு ஐ.கே.கோல்ட் ஹவுஸ் ,ஆர்.எஸ்.ஆர்.ஹர்ட்வெயர் போன்ற நிறுவனங்கள் அனுசரனை வழங்கி இருந்ததோடு ஊடக அனுசரனையை ஹய் டீவி தமிழ் வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad