உள்ளூர் முகவர்களிடம் மின்சார கட்டணத்தை செலுத்தும் பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 12 April 2024

உள்ளூர் முகவர்களிடம் மின்சார கட்டணத்தை செலுத்தும் பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல் !



மின்சார கட்டணம் மற்றும் நீர் கட்டணங்களை உள்ளூர் முகவர்கள் மற்றும் தபாலகங்களில் செலுத்தும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்துதல் மற்றும் பற்றுச்சீட்டு பெறுதல் தொடர்பில் அவதானமாக இருக்கும்படி பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.

குறிப்பாக சில இடங்களில் மக்களிடம் மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணத்திற்கான பணத்தை பெறும் தபாலக உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூர் முகவர்கள் பணத்தை மின்சார சபைக்கு செலுத்தாமல் குறித்த பணத்தை கையாடல் செய்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, தபாலகங்கள், உப தபாலகங்கள்,மற்றும் உள்ளூர் முகவர்களிடம் பணம் செலுத்தும் பொதுமக்கள் பற்றுச்சீட்டிணை உரிய வகையில் பரிசீலிக்கும் பட்டியும் அல்லது இணைய வழி ஊடாக மின்சார சபை கிளை ஊடாகவோ கொடுப்பனவு கிடைக்க பெற்றமை தொடர்பில் உறுதிப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad