கணவனை கொலை செய்த மனைவியும் கள்ளக்காதலனும் கைது ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 12 April 2024

கணவனை கொலை செய்த மனைவியும் கள்ளக்காதலனும் கைது !


வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்தனர்.

சம்பவத்தில் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

நேற்று (11) நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அக்கரைப்பற்று வைத்தியசாலையில் இந்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.

இதனடிப்படையில், இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்தவரின் 33 வயது மனைவி மற்றும் அவரது 63 வயதுடைய கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad