புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும் புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும் புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும்.
புதிய வருடம் பிறத்தல், புதிய நாற்காட்டி, பருவத்திற்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன.
இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும் தமிழ், சிங்களப் புத்தாண்டை உறவுகளையும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக் கொள்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றியே புத்தாண்டுக் கொண்டாட்டங்களை கட்டமைத்துள்ளன.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
புத்தாண்டு நமக்கு சொல்லும் பாடத்தை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொறுத்தமானது என நம்புகிறேன்.
புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என்பதை நினைவுக்கூறுவதோடு அனைவருக்கும் புத்தாண்டுப் பிறப்பு சிறப்பானதாக அமையட்டும் என பிரார்த்திக்கிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
No comments:
Post a Comment