கமு/சது /மஜீட்புர வித்தியாலயத்தில் உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும் செல்வி K.M.F. அஸீமா அவர்கள் 2023 தேசிய மட்டத்தில் நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் (All Island National Level Social Science Competition -2023) வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.
இதனை கெளரவிக்கும் முகமாக அதிபர் தலைமையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான P.M. யாசிர் அரபாத், A.L.A. அப்துல் மஜீட், கோட்டக்கல்விப் பணிப்பாளர் A. நஸீர், உதவிக் கல்விப் பணிப்பாளர் S.L. நிஸாம் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். இதன் போது வலயக் கல்வி அலுவலர்களினால் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், பாடசாலையினால் பொன்னாடை போர்த்தி பரிசில்களும் வழங்கப்பட்டன. அண்மைக்காலமாக மாணவர்கள் பரீட்சைகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் திறமைகளை வெளிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
இதற்கு உறுதுணையாக நின்று வழிப்படுத்தும் வலயக்கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர் திரு.M. முஸம்மில், மற்றும் ஆசிரியர்கள் வெற்றிக்கு உரித்துடையவர்களாவர்.
No comments:
Post a Comment