கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் இருந்து இளைஞர் யுவதிகளுக்கான பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவில் (2023) பங்குபற்றி வெற்றி பெற்ற இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (02-03-2024) மாலை 4மணிக்கு பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலய மண்டபத்தில் கோறளைப்பற்று மத்தி இளைஞர் சேவை பயிலுனர் AS. ஹாரிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் AMM. ஹனீபா அவர்களும் கெளரவ அதிதியாக வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தினுடைய தலைவரும் கிராம சேவகருமான ZM. றிகாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
அத்தோடு பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment