மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள காந்திபுரத்தில் உள்ள நீர் குழியில் இன்று (29) மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வட்சப் சேனல் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
குறித்த இடத்தில் உள்ள வாழைத்தோட்டத்திற்கு நீர் பாய்க்க தோன்டப்பட்ட குழியில் காந்திபுரம் கிராமத்தை சேர்ந்த ஆண் ஒருவரின் சடலத்தை அவதானித்த பொதுமக்கள் பொலீசாருக்கு தெரிவித்ததை அடுத்து குறித்த இடத்திற்கு பொலீசார் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து குற்றத் தடயவியல் பொலீசார் குறித்த இடத்திற்கு வருகை தந்து பிரதேத்தை பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலீசார் முன்னெடுத்தனர்.
உயிரிழந்த நபர் போரதீவுப்பற்று காந்திபுரம் கிராமத்தை சேர்ந்த 65 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான முருகேசு சிவபாதம் என உறவினர்களால் அடையாளம் கானப்பட்டனர்
டெலிக்ராம் ஊடாக செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment