மட்டக்களப்பு ஏறாவூர் அல் ஹஸீம் பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் 24/02/2024 சனிக்கிழமை ஏறாவூர் மட் /மிச்நகர் இல்மா வித்தியாலய மண்டபத்தில் ஜனாபா.றகுமா வீவி அஹமட் இர்பான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலிஷாஹிர் மௌலானா அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களும் விஷேட அதிதியாக ஏறாவூர் நகரசபையின் விஷேட ஆணையாளரும் செயலாளருமான எச்.எம்.எம். ஹமீம் அவர்களும் மட் / மிச்நகர் இல்மா பாடசாலையின் அதிபர் எச்.எல்.முஹாஜீர் அவர்களும் மின்மினி மின்ஹாவும் கலந்து சிறப்பித்தனர்.
பாலர் பாடசாலை மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நிகழ்வை அலங்கரித்ததுடன் அதிதிகளினால் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
No comments:
Post a Comment