முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அப்பம் சாப்பிட்டு விட்டு கட்சி மாறிய நிகழ்வு போன்ற பல நிகழ்வுகள் நமது நாட்டில் இன்னும் சில மாதங்களுக்குள் நடைபெறலாம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 24 February 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அப்பம் சாப்பிட்டு விட்டு கட்சி மாறிய நிகழ்வு போன்ற பல நிகழ்வுகள் நமது நாட்டில் இன்னும் சில மாதங்களுக்குள் நடைபெறலாம் !



முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை; ! 


தேர்தல் ஒன்று இந்த வருடம் நடைபெறலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது அது ஜனாதிபதி தேர்தலா? அல்லது பொதுத்தேர்தலா? என்பதனை அரசாங்கம் இன்னும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை இந்த நிலையில் நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் முக்கியமானவர்கள் எந்த கட்சியுடன் இணைந்துள்ளனர் என்பதை நாம் இப்போது அடையாளம் காண முடியாதுள்ளது.


2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அமைச்சர் பதவியிலும்,சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவில் இருந்தவாரே பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று நாம் யாரும் எதிர்பாக்கவில்லை ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ போட்டியிட வேண்டும் என்ற பிரேரனையை ஆளுங்கட்சிக்கூட்டத்தில் கொண்டு வந்த மைத்திரி பால சிறிசேன மகிந்த ராஜக்ஸவுடன் அமர்ந்து அப்பம் சாப்பிட்டு அங்கிருந்து புறப்பட்டு நேரடியாக ரணில் விக்கிரம சிங்கவின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் தான் எல்லோரும் அறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

இதே போன்ற நிகழ்வுகள் இன்னும் சில மாதங்களில் நமது நாட்டில் நடைபெறலாம்.தேர்தல் அறிவிப்பு வரும் வரைநாம் பொருமையாக இருந்தால் அவைகளை அறிந்து கொள்ளலாம் என சம்மாந்துறை 09ம் கிராம சேவகர் பிரிவுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளை புனரமைப்பு  கூட்டம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்ற போது கலந்துகொண்டு உரையாற்றிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும்,முன்னாள் கிழக்கு மாகாண  அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.


அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் 


சம்மாந்துறை தொகுதியில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் கிளை,இளைஞர்கிளை,மகளிர்கிளைகள் 216 கிளைகள் புனரமைக்க வேண்டியுள்ளது.இதுவரை சம்மாந்துறை,இறக்காமம்,வரிப்பத்தான்சேனை,நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் 27 கிளைகளும்,08மகளிர்கிளைகளும் புனரமைக்கப்பட்டுள்ளது.சம்மாந்துறை தொகுதியில் இன்னும் 181 கிளைகள் புனரமைக்கப்பட்ட வேண்டியுள்ளது.

நாம் கட்சிக்கிளைகள் புனரமைப்பு பணிகளை தேர்தல் 

எதுவும் இல்லாத காலத்தில் முன்னெடுத்துள்ளோம் இதனால் கிராம மட்டத்தில் நமது மக்களைச் சந்தித்து அவர்களின் மன நிலையை அறியக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.எதிர்கால கட்சி செயற்பாடுகளில் எல்லோரையும் இணைத்துக் கொள்ள வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.சம்மாந்துறையில் அமைந்துள்ள 51 கிராம சேவகர் பிரிவுகளில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளைகளை புனரமைக்கும் செயற்பாடுகள் நிறைவு பெற்றதும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு சம்மாந்துறைக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஊடாக பெறலாம் எனற யதார்த்தத்தை எல்லோரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர்,அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன்,அரசியல் அதி உயர் பீட உறுப்பினர் ஏ.எம்.ஏ.அஸீஸ்,முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


                                                                   ( கே எ ஹமீட் ) 

No comments:

Post a Comment

Post Top Ad