மொகிதீன் சன சமூக நிலையத்தினால் பிறைந்துரைச்சேனை சாதுலியா மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கி வைப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 23 February 2024

மொகிதீன் சன சமூக நிலையத்தினால் பிறைந்துரைச்சேனை சாதுலியா மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கி வைப்பு !



பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் இவ்வாண்டு முதலாம் தரத்தில் இணைந்து கொள்ளும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று 22.02.2024ம் திகதி வியாழக்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் தலைமையில் இடம்பெற்றது.  


இந்நிகழ்வில், பாடசாலை அதிபர் மொகிதீன் சனசமூக நிலைய நிருவாகத்திடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க கோறளைப்பற்று பிரதேச சபையின் சனசமூக உத்தியோகத்தர்கள் ஏ.ஹாரூன் அவர்களின் வழிகாட்டலில் துரிதமாகச் செயற்பட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்குமுகமாக புதிய ஆண்டில் கல்வியை ஆரம்பிக்குன் மாணவர்களுக்கான பாடசாலை பைகளை மொகிதீன் சனசமூக நிலைய நிருவாகத்தினரான தலைவர் ஏ.ஜி.அஸ்லம், செயலாளர் எஸ்.ஐ.எம்.நிப்ராஸ், பொருளாளர் பிஸ்தாமி ரவூப், நிருவாக உறுப்பினர் டி.கே.அனீம் ஆகியோரின் பங்களிப்புடன் வழங்கி வைக்கப்பட்டது. 



இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.எம்.அஹ்சாப், ஏனைய அதிதிகளாக அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் எச்.எம்.தாஹிர், ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக், பாடசாலை அபிவிருத்திக்குழுத் செயலாளர் எம்.ஆப்தீன், நூரியா ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.எம்.ஹுசைன், மொகைதீன் தைக்கா பள்ளிவாசல் தலைவர் எம்.பி.எம்.ரொஷான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 



மொகிதீன் சனசமூக நிலையம் பிறைந்துரைச்சேனை  பிரதேசத்தில் கல்வி, கலாசார, சமூகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Post Top Ad