காணாமற்போன மாணவனின் உடல் கரையோதுங்கியது ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 17 February 2024

காணாமற்போன மாணவனின் உடல் கரையோதுங்கியது !



கடலலையில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமற்போன மாணவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓலுவில்-நிந்தவூர் எல்லைக் கடலோரங்களில் விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில் இருவர் கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமற்போன சம்பவம் வெள்ளிக்கிழமை (16) மாலை அப்பகுதியில் சோக நிலையயை ஏற்படுத்தியுள்ளது.



காணாமற்போன சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற  மாணவனின் உடல் இன்று காலை ஒலுவில் பகுதியில்  கரையோதுங்கியுள்ளது. மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வட்சப் சேனல் ஊடாக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

சம்பவ தினம் மாளிகைக்காடு- சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களே பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக்கொண்டிருந்த போது கடலில் அடித்துச்செல்லப்பட்டு காணாமற் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.



13-15 வயதுக்குட்பட்ட 08 பாடசாலை மாணவர்கள்  தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்குச் சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இரண்டு மாணவர்கள்  கடலலை உள்ளிழுத்துச் சென்று விட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.



இது தவிர, ஏனைய ஆறு மாணவர்களிடம் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                                                 ( பாறுக் ஷிஹான் )


No comments:

Post a Comment

Post Top Ad