மட்டக்களப்பு வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்தில் பொங்கல் விழா ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 16 February 2024

மட்டக்களப்பு வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்தில் பொங்கல் விழா !



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்தில் நேற்று (15) ஆம் திகதி  நிகழ்வானது வெல்லாவெளி கமநல நிலையத்தின் பெரும்பாக உத்தியோகஸ்தர் M.I.M.பாயீஸ்  தலைமையில் சிறபாக இடம் பெற்றனர்.

வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும் .

வெல்லாவெளி கமநல சேவைகள் நிலையத்தின் கமநல பிரதேச பெரும்பாக உத்தியோகஸ்தர் தலைமையில் கமநல அமைப்புக்களின் ஒழுங்கமைப்பின் கீழ் தைப்பொங்கல் விழாவானது இந்துக்களின் பாராம்பரிய முறைப்படி மிக விமர்சையாக இடம் பெற்றது.



இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக,


கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் எந்திரி K.திவாகர் அவர்களும் நிர்வாக உத்தியோகஸ்தர் ப.சஞ்ஜீவராஜ் அவர்களும் நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நவகிரி பொறியியலாளர் S.கிசோக்காந் அவர்களும் கமநல காப்புறுதி சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் A.காவன்தீசன் அவர்களும் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி S.விவேகானந்தராஜா அவர்களும் கலந்துகொண்டனர்.



சிறப்பு அதிதிகளாக


கமநல பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான K.ஜெயக்காந்தன், K.உதயகுமார், S.தரிஸ்குமார், வெல்லாவெளி விவசாய போதனாசிரியர்களான T.கோபி, K.கீலசன் மற்றும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாந்தசில்வா ,மற்றும் வெல்லாவெளி கமநலசேவைகள் நிலைய உத்தியோகஸ்தர்கள் வெல்லாவெளி கமநல சேவைகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய மாணவர்களினால் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விவசாயிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் 5ஆம் தர புலமைப்பரீட்சை, உயர்தர பரீட்சை சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



No comments:

Post a Comment

Post Top Ad