மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று திருப்பழுகாமம் இந்துகலா மன்றத்தின் 49வது ஆண்டு நிறைவையொட்டி திரௌபதி அம்மன் ஆலய முன்றில் இன்று (03-02-2024) ஆம் திகதி இந்துகலா மன்றத்தின் தலைவர் இ.ரிலைக் ஷன் தலைமையில் இடம்பெற்றனர்.
தமிழர்களின் இந்து வழிபாட்டு முறையினை சிறப்பிக்கும் வகையில் ஒவ்ஒரு வருடமும் தைப் பொங்கல் விழாவானது சிறப்பாக இடம் பெற்று வருகின்றது.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
இன்றைய நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் (கொக்கட்டிச்சோலை தான்றோன்றிஸ்வரர் ஆலயம்) சிவ ஸ்ரீ வினாயகக் குருக்கள் ( இந்துகுருமார் ஒன்றிய தலைவர்) சிவ ஸ்ரீ க.சுந்தரலிங்கம் நம்பியார் (ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயம் - திருப்பழுகாமம்) வரவேற்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து
நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக
இரா.துரைரெட்ணம் (முன்னாள்.கி.மா.உறுப்பினர்)
க.பேரின்பராசா (மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர்) அ.பேரின்பநாயகம் (மாவட்ட பதிவாளர் ம.தெ.ப. களுவாஞ்சிகுடி) யோ.சதேசா (இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர், (போரதீவுப்பற்று), ம.சூரியகுமாரன் (இந்துசமய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் போரதீவுபற்று)
சிறப்பு அதிதிகளாக
பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராமஉத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்,கிராம அபிவிருத்தி சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், ஆலய நிருவாகம், மன்றங்கள் , சிறுவர் இல்லம் மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய பொங்கல் விழாவின் போது மாணவர்களினால் வரவேற்பு நடனம் கலைநிகழ்ச்சிகள் அதிதிகள் உரைகள் பரிசில்கள் வழங்கள், வாழும் போது வாழ்த்துமோம் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment