சாய்ந்தமருது பிரதேசத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புணரமைப்பு கூட்டம் தொடர்பான விஷேட கலந்துரையாடல் நேற்று (28) சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
இந் நிகழ்வில் கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கட்சியின்அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும் கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி.சமால்டீன், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான எம்.ஐ.எம்.பிர்தெளஸ், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஏ.ஏ.பஸீர், கல்முனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் கல்முனை மாநகர சபை வேட்பாளருமான ஏ .நிசார்தீன் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment