வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, ஊவா,மத்தியமற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்,
அனுராதபுரம் - அடிக்கடி மழை பெய்யும்.
மட்டக்களப்பு - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்.
கொழும்பு - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காலி - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்.
யாழ்ப்பாணம் - அடிக்கடி மழை பெய்யும்.
கண்டி - அவ்வப்போதுமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நுவரெலியா - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
திருகோணமலை - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மன்னார் - அடிக்கடிமழைபெய்யும்.
No comments:
Post a Comment