கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலாளராக கடமையாற்றிய வெள்ளத்தம்பி தவராஜா (கவிஞர் ராஜாத்தி) அவர்கள் இன்று இரவு கொழும்பு வைத்திய சாலையில் காலமானார்.
நடிகனாய், கூத்தனாய்,சிறுகதையாளனாய், நாடக இயக்குனராய், கலை இலக்கிய விமர்சகனாய், குறும்பட தயாரிப்பாளனாய், 'படி' கலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியனாய், பதிப்பாளராய், ராஜாத்தி என்கிற கவிஞனாய், வாழ்ந்த திரு. வெ. தவராஜா அவர்கள் இலங்கை அரச நிர்வாக சேவையின் பல உயர் பதவிகளை வகித்தவர்.
ஆசிரியராக தனது சேவையை ஆரம்பித்த இவர் உதவி திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர், கிழக்குமாகாண கல்வி அமைச்சின் சிரேஷ் உதவிச் செயலாளர், என பல பதவிகளை வகித்தவர். இறுதியாக அவர் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளராக கடமையாற்றி தனது உடல் நிலை காரணமாக கொழும்பில் அமைச்சில் கடமையாற்றும் போது சுகயீனம் காரணமாக காலமானார்.
இதுவரை இவரது தனித்திருத்தல் (கவிதைத் தொகுப்பு) , என் கொலை காரர்கள் (சிறுகதைத் தொகுப்பு), மங்கையராய் பிறப்பதற்கே (நாடக நூல்) ,அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான ஆய்வுக் கட்டுரை நூல் என நான்கு நூல்கள் வெளிவந்துள்ளது. தான் பிரதேச செயலாளராக கடமையாற்றிய இடங்களின் பிரதேச கலாசார பேரவை மூலமாக பல மலர்களை வெளியிட்டவர்.சிறுகதை, கவிதை என பலபயிற்சி பட்டறைகளை நடாத்தியவர்.
No comments:
Post a Comment