சிங்கள நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பொலிஸ் பரிசோதகர் 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நடிகை நேற்றிரவு சந்தேகத்திற்குரிய பொலிஸ் பரிசோதகர் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டியில் பயணம் செய்துள்ளார்.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
சந்தேகநபர் பிலியந்தலை ஜாலியாகொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை நிறுத்தி நடிகையிடம் தவறாக நடந்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த நடிகை பிலியந்தலை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகத்திற்குரிய பொலிஸ் பரிசோதகர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment