இன்றைய நமது நாட்டின் அரசியல் சூழ்நிலையில் எல்லோரும் ஒற்றுமையாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதனால்தான் முஸ்லிம் சமூகம் நன்மை அடையும் என மருதமுனை 4ம் வட்டாரத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புணரமைப்புக் கூட்டம் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர்,மாவட்ட குழுவின் செயலாளரும்,முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன்,அரசியல் அதிஉயர் பீட உறுப்பினரும்,முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.ஆர்.அமீர், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சப்றாஸ் நிலாம்,மருதமுனை-06 அமைப்பாளர் சித்தீக் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில்,
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் மருதமுனை பிரதேசத்துக்கு கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்ட பல நிகழ்வுகளில் மருதமுனையை சேர்ந்த இளைஞர்கள் தங்களையும் கட்சி செயற்பாடுகளில் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.இளைஞர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை கிராம சேவகர் பிரிவுகளில் கட்சிக்கிளைகள் புணரமைக்கும் போது செயற்படுத்த வேண்டும்.இன்று இளைஞர்களாக இருந்து செயற்படுபவர்கள் நாளைய தலைவர்களாக செயல்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
இந்த விடயத்தில் கிராம மட்டத்தில் இயங்கும் கட்சி செயற்பாட்டாளர்கள் முன்னுரிமை வழங்கி செயல்பட வேண்டும்.நீண்ட காலமாக சில பிரதேசங்களில் நமது கட்சியின் மத்திய குழுக்கள் இயங்காமல் உள்ளது.இதனால் கட்சியின் கட்டமைப்புக்கள் செயல் இழந்த நிலமை ஏற்பட்டுள்ளது.இந்த நிலமைகளை அறிந்துதான் கட்சியின் தலைவர் கிராம மட்டத்தில் கட்சிக்கிளைகள், இளைஞர்கிளைகள், மகளிர்கிளைகளை புணரமைப்பு செய்து கிராம மட்டத்தில் கட்சியை பலப்படுத்துமாறு பணித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் முழுவதும் எமது குழுவினால் கடந்த 07 மாத காலமாக நமது கட்சிக் கிளைகள் புணரமைப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு நமது கட்சி முக்கியஸ்தர்கள் ஒத்துழைப்புடன் கட்சிக் கிளைகள் புணரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.இந்த வேலையில் கட்சியின் கிராம மட்ட செயற்பாட்டாளர்கள் அர்பணிப்புடன் செயற்பட்டு கட்சியின் வளர்ச்சி பாதைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நமது கட்சி கடந்த காலங்களில் பாரிய அபிவிருத்தி பணிகளை புரிந்துள்ளது ஆனால் கட்சி கட்டமைப்புக்கள் இயங்காத காரணத்தால் கட்சிக்கும்,மக்களுக்கும் இடையில் இடைவெளி உருவாகி உள்ளது.
கட்சி கிளைகள் எல்லாம் புணரமைக்கப்பட்ட பின் கட்சி தலைவரால் ஒவ்வொரு பிரதேசத்துக்குமான அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு மத்திய குழுக்களும் நியமிக்கப்படும்.அதனைத் தொடர்ந்து மத்திய குழுக்களின் ஆலோசனையுடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு நமது கட்சியினை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment