சுகாதார துறைசார்ந்த 10 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுக்கு இணைவாக தமக்கான கொடுப்பனவையும் 35 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள், ஆய்வக ஊழியர்கள், தரவுப் பதிவாளர்கள் உள்ளிட்ட சுகாதார துறையுடன் தொடர்புடைய 10 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. 48 மணி நேரம் பணிப்புறக்கணிப்பு தொடருமென குறித்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment