யாழில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்; மக்களே அவதானம்! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 December 2023

யாழில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்; மக்களே அவதானம்!

யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலையால் டெங்கின் தாக்கம் மற்றும் காய்ச்சல், தடிமன் உள்ளிட்ட நோய்த்தாக்கங்கள் மக்களிடையே அதிகரித்துள்ளது.

வட்சப் ஊடாக இணைந்துள்ள இங்கே அழுத்தவும்.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் குறிப்பாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சிகிச்சைபெற வருவோரின் எண்ணிக்கையே உயர்வடைந்துள்ளது.அந்தவகையில் 7,8, 9, 10 ஆம் இலக்க விடுதிகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக  இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வைத்தியசாலையில் கட்டில்கள் போதாமையால் நோயாளர்கள் அவதியுற்று வருவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. எனவே பொதுமக்கள் நோய்களில் இருந்து தம்மை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாரு அரிவுறுத்தப்படுகின்றனர். 





No comments:

Post a Comment

Post Top Ad