Eravur Supreme Lions Club மற்றும் Batticalo Lady’s Lions Club இணைந்து நேற்று (22.12.2023 ) மட்/ மம/ ஜயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் “சிறுவர்களை பிலஸ்டிக் பாவனையிலிருந்து பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் சுமார் 120 மாணவர்களுக்கான Silver Lunch Box , மற்றும் Water Bottle களும் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் AS.லாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக Regonal Chairman Lion Dr. ரோசினி முருகுப்பிள்ளை அவர்களும் சிறப்பு அதிதிகளாக Batticalo Lady’s Lions Club தலைவி Lion சாந்தா அவர்களும் Eravur Supreme Lions Club தலைவர் Lion AR. ஆஸீக் உட்பட கழகத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டதுடன் இத்திட்டத்திட்டத்திற்கான நிதியினை Lion Dr. ரோசினி முருகுப்பிள்ளை மற்றும் Lion நிஷால்தீன் ஆகியோர் வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
மேலும் Eravur Supreme Lions Club யின் 2023 ஆண்டில் 5000 பலன்தரும் மரக்கன்றுகளை வழங்கும் திட்டத்தில் இறுதிக்கட்டத்தின் ஓர் அங்கமாக பலன்தரும் மரக்கன்றுகளும் இந் நிகழ்வின்போது மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
Eravur Supreme Lions Club யின் 2024ம் ஆண்டுக்கான கல்வி அபிவிருத்திப்பணிகளில் முதன்மைப் பாடசாலையாக ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் அப்பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஓர் அங்கமாக அண்மையில் பாடசாலைக்கான நீண்டகால தேவையாக இருந்த பெயர்ப்பலகையும் அமைத்துக்கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(உமர் அறபாத் -ஏறாவூர் )
No comments:
Post a Comment