கிழக்கு மாகாண சுதேச மருத்துவத்திணைக்கள பதில் ஆணையாளராக வைத்திய அத்தியட்சகர் திருமதி ஜே.பாஸ்கரன் நியமனம்.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண பதில் ஆணையாளராக மட்டக்களப்பு சித்த தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திருமதி ஜே.பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக்கடிதம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளராகச் செயற்பட்டு மாவட்டத்தின் சுதேச மருத்துவ சேவைகளை திறன்பட வழங்குவதில் அரும்பாடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னார் பதில் ஆணையாளர் நியமனம் பெற்றிருப்பது கிழக்கு மாகாண சுதேச மருத்துவத்துறை மேலும் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
( எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் (JP) )
No comments:
Post a Comment