மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்று கூடலும் பிரியாவிடை நிகழ்வும் இன்று (23-12-2023)ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேசசபை அலுவலகத்தில் நலன் புரிச்சங்கத்தின் தலைவரும் பிரதேசசபை செயலாளரும் ஆகிய வி.கௌரிபாலன் தலைமையில் நடைபெற்றது.
பிரியாவிடை வைபவமானது அலுவலகத்தில் இருந்து அற்பணிப்புடன் சேவையாற்றி ஓய்வு பெற்றும் மற்றும் இடம் மாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களான போரதீவுப்பற்று பிரதேசசபை முன்னாள் செயலாளர் பா.சதீஸ்கரன் உள்ளுராட்சி உதவியாளர் K.குருசாந்தன் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான K.மனோகரன்,S.கோகுலமூர்த்தி ஊழியர்களான T.கிருஸ்ணபிள்ளை,K.விஜயரெட்தினம் சேவை நலன் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்விற்கு போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளரும் நலன்புரிச் சங்க தலைவரும் ஆகிய வி.கௌரிபாலன் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment