அட்டாளைச்சேனை சம்பு நகர் அக்/அல்- மினா வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை நேற்று முன்தினம் (07)மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு கேடயத் தலைவர் SM.சபீஸ், அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.றஸ்மி, ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் மூத்த கல்விமான் யூ.எம்.வாஹிட் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறுவர் சந்தையினை திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.பாயிஸ்,அக்/அந்-நூர் மகா வித்தியாலய அதிபர் ஏ.எம்.அஸ்மி, அட்டாளைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி MS.ஜுனைதீன், சேவைக் கால ஆசிரிய ஆலோசகர் முகம்மது இப்றாகீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இதன் போது இப்பாடசாலையில் SDEC இன் செயலாளராக இரண்டு வருடங்கள் சிறப்பாக செயற்பட்டமைக்காக திருமதி றிஸ்னா றிஸ்வான் பாடசாலை சமூகத்தால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில், பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம்.ஜெசீர், சம்பு நகர் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் யூ.கே.ஜுனைட், அதிபர்களான MJ அன்வர் நௌஷாட் ,எஸ்.எம்.தாஜுதீன், யூ.ஏ.இப்றாகீம், பிரதி அதிபர் எம்.ஐ.ஹாசீம், வலயத் தலைவர் எம்.எச்.அப்துல் ஹைய் மற்றும் ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் SDEC உறுப்பினர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு கேடயத்தின் தலைவர் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீசினால் பாடசாலையின் Toner தேவையினை நிவர்த்தி செய்தார்.
(முகம்மது)
No comments:
Post a Comment